19.5 C
Scarborough

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ நடிகர்கள் பட்டியல் வெளியீடு – ஸ்பைடர்மேன், ஹல்க் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

Must read

2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு புதிய அவெஞ்சர்களை உருவாக்கும் முயற்சியில் மார்வெல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சில வெற்றிகள் பல சொதப்பல்கள் என சென்று கொண்டிருக்கும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்து ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளிட்ட படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. அயர்ன் மேனாக போய் தற்போது டாக்டர் டூம் என்ற பிரபல வில்லன் கதாபாத்திரமாக மீண்டும் மார்வெல் படங்களுக்குள் வருகிறார் ராபர்ட் டவுனி ஜூனியர்.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பழைய புகழ்பெற்ற நடிகர்களுடன் சில புதிய நடிகர்களும், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் உருவாவதற்கு முன்பு வெளியான ‘எக்ஸ் மென்’ நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் – தோர்
ஆண்டனி மெக்கி – கேப்டன் அமெரிக்கா
செபாஸ்டியன் ஸ்டான் – பக்கி பார்ன்ஸ்/ வின்டர் சோல்ஜர்
பால் ரட் – ஆன்ட் மேன்
சிமி லியு – ஷான் சி
பெட்ரோ பாஸ்கல் – மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்
வனெஸ்ஸா கிர்பி – இன்விசிபிள் உமன்
ஜோசப் குயின் – ஹியூமன் டார்ச்
லெட்டிட்டா ரைட் – அயர்ன்ஹார்ட்
வியாட் ரஸ்ஸல் – யுஎஸ் ஏஜென்ட்
டாம் ஹிடில்ஸ்டன் – லோகி
எபான் மோஸ் – திங்
ஃப்லோரன்ஸ் பக் – ப்ளாக் விடோ
கெல்ஸி கிராம்மர் – பீஸ்ட்
பாட்ரிக் ஸ்டூவர்ட் – ப்ரொபசர் எக்ஸ்
ஐயன் மெக்கெல்லன் – மெக்னீட்டோ
இவர்களுடன் ராபர்ட் டவுனி ஜூனியர் – டாக்டர் டூம்

இதில் ஸ்பைடர்மேன் – டாம் ஹாலண்ட், டாக்டர் ஸ்ட்ரேஞ் – பெனடிக்ட் கம்பர்பேக், ஹல்க் – மார்க் ரஃபலோ உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் வழக்கமாக மார்வெல் சில கேரக்டர்களை கடைசி வரை ரகசியமாக வைத்திருந்து திரையரங்கில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும். தற்போது முதற்கட்ட பணிகள் இப்படத்துக்கு தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மே 1 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article