1.7 C
Scarborough

அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி;ஐ நா சபையிலும் உரையாற்ற உள்ளார்

Must read

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்வார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article