தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை மாற்றத்துக்கான அரசாங்கமாகக் கருதமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேறொரு நாடு வலியுறுத்துவதானது, இலங்கைக்கு ஒரு அவமதிப்பு எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்துக்கு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களை வெளியிடாமல் பின்னடிப்பு செய்வதனால் இந்த அரசாங்கமும் ஊழலுக்கு அடிமையாகி உள்ளதா என்ற சந்தேகம் தோன்றுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.