ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குயின் வீதி மற்றும் சர்ச் வீதி அருகே நடந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் குறித்து டொராண்டோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோதல் இடம்பெற்றதாக வந்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று அதிகாலை 4:44 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வருகை தந்தபோது, 30 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வரும் நிலையில்
சந்தேக நபர் சுமார் ஐந்தடி ஒன்பது உயரம் கொண்டவர் என்றும், பொன்னிற முடி, ஆட்டின் தாடி, வெள்ளை சட்டை மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்தவர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.