அசோக் செல்வனுடன் அவரது அடுத்த திரைப்படத்தில் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த ஏனைய விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.