16.4 C
Scarborough

அரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்

Must read

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது.

கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்

அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், என்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின்- பி மற்றும் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும்போதும் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி கழுவுவதனால் முகம் எப்போதும் இளமையாக இருக்கும்.

அரிசி நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக அதனை வேறு சமையலுக்கு பயன்படுத்துவதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மாவு சத்து நிறைந்த இந்த தண்ணீர் தானியங்களில் கூடுதல் சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்க பெரிதும் துனைப்புரிகின்றது.

மீதமுள்ள அரிசி தண்ணீரை சூப் செய்வதற்கும் பயன்படுத்தலாம் இதனால் சூப்பின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.

காய்கறிகளை ஆவியில் வேக வைக்கும் பொழுது அதற்கு வெறும் தண்ணீருக்கு பதிலாக நீங்கள் அரிசி தண்ணீர் பயன்படுத்தினால் அளப்பரிய நன்மைகளை பெற முடியும்.

பிரட், பேன் கேக் அல்லது மஃபின் போன்ற பேக்கிங் சமையலின் போது அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும்.

அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து ‘நொதித்தல்’ முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை போத்தலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்க முடியும்.

தலைக்கு ஷெம்பூ பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் பளபளப்புக்கும் துணைபுரிகின்றது. அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article