19.9 C
Scarborough

யாழ் வந்த பிரபல தென்னிந்திய நடிகர்!

Must read

தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர். பாண்டியராஜன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்றையதினம் (05.05.2024) யாழ். கொழும்புத்துறை, சுண்டுக்குழியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

மக்களுக்கு சினிமாவும், சின்னத்திரையும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது ஆபத்தா?ஆனந்தமா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்துள்ளனர். மேலும் இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்தும் மக்கள் வருகைதந்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article