17.3 C
Scarborough

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்ப்படப்போகும் நெருக்கடி!

Must read

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவினங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பயணங்கள்
இதேவேளை இதுவரை காலமும் அதிபர் பங்கேற்ற வெளிநாட்டுப் பயணங்கள், ஒவ்வொரு பயணத்திலும் சந்தித்த வெளிநாட்டு தலைவர்கள் தொடர்பில் தனித்தனியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்த அரச தலைவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்துள்ள உடன்படிக்கைகள் மற்றும் அந்த உடன்படிக்கைகளில் எட்டப்பட்ட விடயம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera), பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் (Dinesh Gunawardena) இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article